பெண்களின் பெருமைகள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

தாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு
WWW.FLOWERKING.INFO

🤱தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகனே
என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்

🤱ஒரு பயம் எனக்கு,
எப்போதாவது ஒருநாள்
என் விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிடுவானோ என்று.

🤱மகனே மறந்தும்
அப்படி சொல்லிவிடாதே
மரணித்து போய்விடுவேன்.

🤱சின்ன வயதில் நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் நான் சலிக்காமல் பதில் சொல்வேன்.

🤱என் வயதான காலத்தில்
நானும் உன்னிடம் குழந்தை போல் வினா எழுப்பக்கூடும்
கத்தாதே வாயை மூடு
என்று சொல்லிவிடாதே
வலி தாங்க முடியாத பாவி நான்.

🤱வீடெல்லாம் நீ இறைத்து வைத்த சோற்றுப் பருக்கையை என் விரல்களால் கூட்டி
அள்ளுவேன்.

🤱என் முதிர் வயதில்
என் வாய்க்கொண்டு செல்லும் உணவு தட்டி தரையில் விழக்கூடும்
தவறியும் என்னை திட்டாதே
தாங்க முடியாது என்னால்.

🤱என் சிறுநீர் பை பலம் இழந்திருக்கக்கூடும்
சில இடங்களில் சிறுநீர் சிந்தியிருக்க கூடும்
இச்…….சீ என்று முகம் சுழிக்காதே என் முந்தானையில் உன் சிறுநீர் வாசம் இன்னும் மறையவேயில்லை.

🤱மயானம் நடந்து போக
திராணி இருக்கும்போதே
நான் இறந்துவிடவேண்டும்
மறந்தும் முதியோர் இல்லத்தில் என்னை மூழ்கடித்துவிடாதே.

🤱ஒரு வருடம் உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை பாலாக்கி பருக செய்தவள் நான்
பரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே.

🤱நான் இறப்பதற்குள் ஒரு முறையாவது உன் மடியில் என்னை உறங்க வை.

🤱என் உயிர் பிரியும் நேரம்
நீ என் பக்கத்தில் இருக்க வேண்டும் என இருகரம் கூப்பி கேட்கிறேன்.

🤱இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா?

🤱இதை படித்து என் எண்ணம் அறிவாய்,என்னை அறிவாய்,
என்னை நேசிப்பாய்,என்ற நம்பிக்கையில் அல்ல
ஒவ்வொரு தாயின்
உணர்வும் இதுதான்.
என்பதை நீ உணர வேண்டும்.

🤱பெண்மையை நீ மதிக்க வேண்டும் இதை படித்து நீ அழுவாய் என்று எனக்குத் தெரியும் அழாதே பெண்மையை மதி
அதுபோதும்.

நன்றி மகனே.

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

****************
WWW.FLOWERKING.INFO
உடல்நலம்,பொதுஅறிவு தகவல்கள், தத்துவங்கள்.

****************

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇👇

இதை கிளிக் செய்யுங்கள்

நன்றி.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.