பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

வரலாற்றில் இன்று 23/10/2018

வரலாற்றில் இன்று 23/10/2018;-

*_🌴🌴🌴🌴🌴_*
•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 06_*

*_23.10.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 42 – உரோமைப் பேரரசன்புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும்தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான்.

425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.

1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன.

1694 – வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர்.

1707 – பெரிய பிரித்தானியாவின்முதல் நாடாளுமன்றம் கூடியது.

1739 – பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசூரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.

1870 – பிரான்சின் மெட்சு என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் புருசியா வெற்றியடைந்தது.

1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிசு நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்க விட்டார்.

1911 – முதற்தடவையாக வானூர்திஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில்இருந்து புறப்பட்டு துருக்கியஇராணுவ நிலைகளை அவதானித்தான்.

1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.

1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

1917 – லெனின் அக்டோபர் புரட்சிக்குஅழைப்பு விடுத்தார்.

1929 – 1929 வால் வீதி வீழ்ச்சி. பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தைவீழ்ச்சியடையத் தொடங்கியது.

1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோவை நாட்சி செருமனிகைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் அல்-அலமைன் சண்டை: வடக்கு எகிப்தில், பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரிதலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1942 – அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்து 12 பேரும் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1955 – பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.

1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில்பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத்ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.

1958 – நோவா ஸ்கோசியாவில்சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1வரையில் மீட்கப்பட்டனர்.

1966 – ஐக்கிய நாடுகள் அவை மைய மண்டபத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

1983 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – கம்யூனிச அங்கேரிய மக்கள் குடியரசு கலைக்கப்பட்டு அங்கேரியக் குடியரசு நிறுவப்பட்டது.

1991 – கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

1991 – ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் விடுதலைப் புலிகளால்ஆரம்பிக்கப்பட்டது.

1993 – பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசுப் படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1998 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத்ஆகியோருக்கிடையில் “அமைதிக்காக நிலம்” என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.

2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்சினியத்தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2004 – வடக்கு சப்பானில்நீகாட்டாவில் நிலநடுக்கம்தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 2,200 பேர் காயமடைந்தனர்.

2006 – இலங்கை சுதந்திரக் கட்சியும்ஐக்கிய தேசியக் கட்சியும்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டன.

2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் உயிரிழந்தனர்.

2015 – பற்றீசியா சூறாவளிமெக்சிக்கோவைத் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1873 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1975)

1875 – கில்பர்ட் நியூட்டன் லூயிசு, அமெரிக்க வேதியியலாளர் (இ. 1946)

1894 – எம்மா வுசோத்சுகி, அமெரிக்க வானியலாளர் (இ. 1975)

1900 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (இ. 1978)

1905 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (இ. 1975)

1920 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்க அறிவியலாளர் (இ. 1998)

1923 – பைரோன் சிங் செகாவத், இந்திய அரசியல்வாதி (இ. 2010)

1939 – க. வி. விக்னேஸ்வரன், இலங்கை நீதிபதி, 1வது வட மாகாண முதலமைச்சர்

1940 – பெலே, பிரேசில் கால்பந்து வீரர்

1942 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க இயக்குநர் (இ. 2008)

1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (இ. 2000)

1954 – ஆங் லீ, தாய்வான்-அமெரிக்க இயக்குநர்

1960 – ராண்டி பௌஷ், அமெரிக்க எழுத்தாளர், கணினி அறிவியலாளர் (இ. 2008)

1974 – அரவிந்த் அடிகா, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்

1976 – ரியான் ரெனால்ட்ஸ், கனடிய-அமெரிக்க நடிகர்

1979– பிரபாஸ், தெலுங்குத் திரைப்பட நடிகர்

1989 – ஜொனிதா காந்தி, இந்தோ-கனடியப் பாடகி

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1921 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டிய தொழிலதிபர் (பி. 1840)

1986 – டபிள்யூ. எம். எஸ். தம்பு, இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1902)

2010 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1918)

2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினியியலாளர் (பி. 1927)

2012 – சுனில் கங்கோபாத்யாயா, வங்காளக் கவிஞர் (பி. 1934)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

புரட்சி நாள் (மாக்கடோனியக் குடியரசு)

விடுதலை நாள் (லிபியா)

அமைதி ஒப்பந்த நினைவு நாள் (கம்போடியா)

மோல் நாள்

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைத்தளத்தில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

பொதுஅறிவு-உடல்நலம்-தத்துவம்-விழிப்புணர்வு

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.