பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

வரலாற்றில் இன்று 18/10/2018

*🔥வரலாற்றில் இன்று🔥*

_*அக்டோபர் 18 (October 18) கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன.*_

*════ ════*

*💢நிகழ்வுகள்💢*

• 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.

• 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.

• 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.

• 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.

• 1648 – அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.

• 1748 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

• 1860 – இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்தது.

• 1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

• 1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

• 1912 – முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.

• 1921 – சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.

• 1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

• 1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.

• 1944 – சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.

• 1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.

• 1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

• 1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

• 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

• 1991 – நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.

• 2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.

• 2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.

*════ ════*

*🔵பிறப்புகள்🔵*

• 1130 – சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200)

• 1859 – என்றி பெர்குசன், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)

• 1882 – பல்லடம் சஞ்சீவ ராவ், தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)

• 1910 – வி. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 2006)

• 1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி

• 1950 – ஓம் பூரி, இந்திய நடிகர் (இ. 2017)

• 1952 – ரோய் டயஸ், இலங்கைத் துடுப்பாளர்

• 1956 – மார்ட்டினா நவரத்திலோவா, செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை

• 1960 – ஜான் குளோட் வான் டாம், பெல்சிய நடிகர்

• 1965 – சாகிர் நாயக், இந்திய இசுலாமிய மதகுரு

• 1973 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)

• 1974 – அமீஷ் திரிபாதி, இந்திய நூலாசிரியர்

• 1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

• 1978 – செந்தில் குமார், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்

• 1984 – பிரீடா பின்டோ, இந்திய நடிகை

• 1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்

*════ ════*

*⚫இறப்புகள்⚫*

• 1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326)

• 1775 – சிலுவையின் புனித பவுல், இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694)

• 1871 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791)

• 1931 – தொமஸ் அல்வா எடிசன், கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1847)

• 1934 – சான்டியாகோ ரமோன் கசல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852)

• 1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878)

• 1985 – கே. ஆர். ராம்சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915)

• 2004 – வீரப்பன், சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952)

• 2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)

*════ ════*

*சிறப்பு நாள்*

• *அலாஸ்கா நாள் (அலாஸ்கா, அமெரிக்கா)*

• *விடுதலை நாள் (அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)*

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைத்தளத்தில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.