பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

வரலாற்றில் இன்று 13/10/2018

*♨ வரலாற்றில் இன்று♨*

*📆13/10/2018📆*

🔹அக்டோபர் 13 (October 13) கிரிகோரியன் இ ஆண்டின் 286 ஆம் நாளாகும் நெட்டாண்டுகளில் 287 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.

*🔸நிகழ்வுகள்*

54 – உரோமைப் பேரரசர் குளோடியசு நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தான், அவனது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானான்.

1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.

1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.

1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.

1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.

1885 ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.[1]

1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.

1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.

1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.[2]

1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.

1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.

1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.

1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.

2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.

*👨‍👩‍👧‍👦பிறப்புகள்*

1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், அரசியல்வாதி (இ. 1969)

1908 – புதுவை சிவம், புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989)

1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)

1911 – கு. வன்னியசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1959)

1911 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 2001)

1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013)

1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

1936 – சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996)

1936 – பொ. வே. பக்தவச்சலம், மார்க்சியவாதி (இ. 2007)

1937 – ஏ. எச். எம். பௌசி, இலங்கை அரசியல்வாதி

1947 – அவி லேர்னர், இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்

1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997)

1956 – கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1982 – இயன் தோப், ஆத்திரேலிய நீச்சல் வீரர்

1990 – பூஜா ஹெக்டே, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

*🖤இறப்புகள்*

54 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (பி. கிமு 10)

1240 – ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205)

1695 – எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)

1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867)

1953 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883)

1956 – சங்கரலிங்கனார், தமிழக செயற்பாட்டாளர், போராளி

1987 – வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902)

1987 – கிஷோர் குமார், இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929)

2015 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)

2016 – 9-ம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1927)

*👌சிறப்பு நாள்*

பன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.