ஆன்மிகம், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

நவராத்திரியில் வணங்க வேண்டிய அன்னையும், நிவேதனமும்.

நவராத்திரியில் வணங்க வேண்டிய அன்னையும், நிவேதனமும்:-

நவராத்திரியில் நாம் ஒன்பது நாட்களும் எந்தெந்த அன்னையை வணங்க வேண்டும். நிவேதனமாக என்ன படைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலாம் நாள் :- 1

சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள்.

நிவேதனம்:-சர்க்கரைப் பொங்கல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இரண்டாம் நாள்:- 2

அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

நிவேதனம் :-தயிர்ச்சாதம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மூன்றாம் நாள்:-3

சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

நிவேதனம்:-வெண்பொங்கல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நான்காம் நாள்:- 4

அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். இவள் தீயவற்றை சம்ஹரிப்பவள்.

நிவேதனம் :-எலுமிச்சை சாதம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஐந்தாம் நாள்:- 5

அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். இவள் சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். க டின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

நிவேதனம் :-புளியோதரை.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஆறாம் நாள்:- 6
அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். இவள் தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்குபவள். வீரத்தைத் தருபவள்.

நிவேதனம் :-தேங்காய் சாதம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஏழாம் நாள்:- 7

அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். இவள் விஷ்ணு பத்தினி. தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நிவேதனம் :-கற்கண்டு சாதம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எட்டாம் நாள்:-8

அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

நிவேதனம் :- சர்க்கரைப் பொங்கல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஒன்பதாம் நாள்:- 9

அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். இவள் வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம்.

நிவேதனம் :-சுண்டல்

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.