பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

வரலாற்றில் இன்று 7.10.2018

*♨ வரலாற்றில் இன்று ♨*

*📆07/10/2018📆*

🔸அக்டோபர் 7 (October 7) கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.

*🔹நிகழ்வுகள்*

கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு.

1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது.

1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியருக்கு எதிரான இரண்டாவது சரட்டோகா போரில் அமெரிக்கப் படைகள் வென்றன.

1840 – இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1919 – நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.

1933 – ஏர் பிரான்சு நிறுவனம் ஆரம்பபிக்கப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: அவுசுவிட்சு வதை முகாமில் இடம்பெற்ற கிளர்ச்சியில் யூதக் கைதிகள் அங்கிருந்த சவக்காலையைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

1949 – கம்யூனிச செருமன் மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1950 – அன்னை தெரேசா பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவினார்.

1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.

1958 – பாக்கித்தான் அரசுத்தலைவர் இசுக்காண்டர் மிர்சா நாட்டின் அரசியலமைப்பைக் கலைத்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

1985 – புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் வரை உயிரிழந்தனர்.

1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலித்தானின் விடுதலையை அறிவித்தனர். ஆனாலும், எந்நாடுகளும் இதனை அங்கீகரிக்கவில்லை.

2001 – ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.

2004 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து விலகினார்.

2008 – சிறுகோள் 2008 டிசி3 சூடானுக்கு மேலாக 37 கிமீ உயரத்தில் வெடித்தது.

2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.

*👨‍👩‍👧‍👦பிறப்புகள்*

1885 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (இ. 1962)

1900 – ஐன்ரிக் இம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (இ. 1945)

1906 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (இ. 1966)

1914 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (இ. 1974)

1920 – முடியரசன், தமிழகக் கவிஞர் (இ. 1998)

1931 – டெசுமான்ட் டுட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க ஆயர்

1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்

1937 – அ. தட்சிணாமூர்த்தி, தமிழறிஞர், நூலாசிரியர்

1938 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (இ. 2016)

1938 – புளியங்குடி க.பழனிச்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)

1945 – நிக்கோலாய் சக்கூரா, உருசிய வானியற்பியலாளர்

1952 – விளாதிமிர் பூட்டின், உருசியாவின் 4வது அரசுத்தலைவர்

1979 – சான் ஆஷ்மோர், கனடிய நடிகர்
– நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1981 – வைக்கம் விஜயலட்சுமி, தென்னிந்திய வீணைக் கலைஞர், பின்னணிப் பாடகி

1983 – பூஜா காந்தி, தென்னிந்திய நடிகை

*🖤இறப்புகள்*

336 – மாற்கு (திருத்தந்தை)

1708 – குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666)

1813 சாக்கப் இச்செலம், சுவீடிய வேதியியலாளர் (பி.

1746)
1849 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1809)

1919 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (பி. 1856)

1984 – அப்துல் காதர் லெப்பை, இலங்கைக் கவிஞர் (பி. 1913)

2010 – அ. வெங்கடாசலம், தமிழக அரசியல்வாதி (பி. 1955)
2012 – ஏ. ஜெகந்நாதன், இந்திய இயக்குநர்

2014 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமானிய எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1926)

*👌சிறப்பு நாள்*

உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4 – 10)

ஆசிரியர் நாள் (லாவோஸ்)

👉இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉இங்கு கிளிக் செய்யுங்கள் 2

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.