தெரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கை தத்துவங்கள், Facebook WhatsApp posts

வாழ்க்கைக்கு நன்மை தரும் வாக்கியங்கள்

வாழ்க்கைக்கு நன்மை தரும் வாக்கியங்கள்

😃 ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்….

😃 நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…
நாளும் அது புரிவதில்லை

😃 பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

😃 இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்…
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

😃 நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …

😃 நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

😃 நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

😃 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் …
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

😃 இனி எதற்கும் “ஏன்” என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ….
அதற்கும் … “ஏன்” என்று தான் கேட்பாள் இந்த பெண் .

😃 அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே …
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

😃 சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது …
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

😃 கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

😃 வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

😃 வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்… அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…

😃 மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் …
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் …

😃 எத்தனை காலம் கடந்தால் என்ன…. சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை…..

😃 இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ….ஏனெனில் …
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் …

😃 பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

😃 தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

😃 சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனை_சீரழிக்கும் துரோகியை_விட …
முறைத்துக்_கொண்டே – உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !…..

😃 அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை….
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

😃 உனக்காக… தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

😃 அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை…

😃 பேரின்பம் வேண்டாம்…
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க………

😃 நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது……

😃 வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

😃 புன்னகை பிரச்சினைகள் “வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் “பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா “பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

😃 அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது…..

😃 வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே…
வாழ்க்கை முடிந்துவிடுகிறது…!!

🌻👑🌻👑🌻👑🌻👑🌻👑

வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் இந்த அருமையான வாக்கியங்களை அனைவருக்கும் பகிருங்கள்.

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு👇👇👇

click here

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.